வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்களும், இரண்டு காளைகளும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இன்று விருவிருப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில்
700 காளைகளும், 270 மாடு பிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மணப்பாறையை சேர்ந்த இரண்டு பேர் தங்களுடைய மூன்று காளைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு போட்டிக்கு சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பின் காளைகளோடு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருக்கும்போது திருவரங்குளம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மீது லாரி மோதியது.
இந்த விபத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்கி (24), மணப்பாறை செவலூர் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன்(26) ஆகிய இருவரும்
சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். மேலும் மூன்று காளைகளில் இரண்டு காளை சம்பவ
இடத்திலேயே பலியானது. ஒரு காளையை கால்நடை துறையினர் மீட்டு சிகிச்சைக்காக
கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்