சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி, ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். டி20 தரவரைசையில் முதல் இடம் பெறும் நான்காவது இந்தியர் ஆவார்.
மேலும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் திலக் வர்மா 804 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் 798 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 5வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி 706 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 252 புள்ளிகளுடன் புள்ளி) முதல் இடத்தில் உள்ளார்.







