திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம்!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட…

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் 1947 திரைப்பட இயக்குநர் பொன்குமார் இருவரும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். கோயிலில் மூலவர் சன்னதியில் உச்சிக்கால தீபாராதனையின் போது பூஜை செய்து வழிபாடு செய்த அவர்கள் தொடர்ந்து சண்முகர், தட்சணாமூர்த்தி மற்றும் பெருமாள், உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் வழிபாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியில் வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கண்டதும் அர்ச்சகர்களும், பக்தர்களும் , கோயில் தனியார் காவலாளிகளும் அவரை சுற்றி வளைத்து செல்பி எடுத்தும் தனியே புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.