தளபதி 68-க்கு வாழ்த்துத் தெரிவித்த அஜித்! – இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!

தளபதி  68-க்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்துத் தெரிவித்தாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.  விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த…

தளபதி  68-க்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்துத் தெரிவித்தாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. இன்னும் லியோ படமே ரிலீஸ் ஆகாத நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது. முதலில் இந்த படத்தை அட்லீ இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பாலிவுட்டில் பிசியானதால் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த பட்டியலில், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜின் பெயரும் அடிபட்டது.

இந்நிலையில்  ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். யுவன் கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார்.  சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

பொதுவாகவே வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே சற்று வித்யாசமாகவே இருக்கும். சென்னை 28 படத்தில் துவங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் ஏதேனும் வித்யாசமான விஷயங்களை வெங்கட் பிரபு முயற்சித்து வருகிறார். அந்த வகையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் இப்படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது தளபதி 68 படத்தில் அவருக்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் விஜய் 68 க்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்துத் தெரிவித்தாரா? எனப் பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு வெங்கட் பிரபு, ‘முதல் வாழ்த்தே அஜித் சாரிடமிருந்துதான் வந்தது’ எனப் பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.