தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியின் படி பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்துள்ளார். இப்படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளில் இப்படை ஈடுப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்திலும் பெண்களுக்கென்ற சிறப்பு பாதுபாப்புப் படை உருவாக்கபப்ட்டுள்ளது.
மேற்கு வங்கம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் காவல் ஆணையரகங்களிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘துர்கா சுரக்ஷா படை’ (Durga Suraksha squad) என்ற ரோந்துப் பிரிவை அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தொடங்கி வைத்துள்ளார். இப்படையில் உள்ள இருசக்கர வாகனங்களுடன் கூடிய பெண் காவலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு காவல்துறையின் இருப்பை வெளிப்படையாகத் தெரியப்படுத்துவார்கள்.
முதல் கட்டமாக இப்படைக்கு 213 இருசக்கர வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு, அதிநவீன கேமராக்களுடன் கூடிய 20 நேரடி ஒலி-ஒளி transmission systems ஒதுக்கப்பட்டுள்ளன.
அதே போல் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான பிரத்யேக உதவி மையங்கள் (women’s help desks) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்கள் பயிற்சி பெற்ற பெண் காவலர்களைக் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும். பெண்கள் நேரடியாக பெண் அதிகாரிகளிடம் புகார்களை அளிக்கவும், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (counselling) பெறவும் இது உதவுகிறது.




