குதிரை பேர விவகாரம்: இன்றைக்கு தேர்தல் நடந்தாலும் தவெக வெற்றி பெறும் – அமைச்சர் சிடிஆர்…!

குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் தவெகவிற்கு இல்லை என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது ஆளுநருக்கு தேவையில்லாத விஷயம். ஆளுநரின் ஆய்வுப் பணிகளின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

வைகை ஆற்றை தூர்வார வேண்டும் என சொல்லும் ஆளுநரால் மண்வெட்டி எடுத்து வெட்ட முடியுமா?. முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் அதிகாரிகள் ஆளுநரின் ஆய்வுக்கு கூட்டங்களில் பங்கேற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் அவதூறாக பேசியதால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இல்லை. இன்றைக்கு தேர்தல் நடந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பேரம் பேசியதாலேயே விரைவில் தேர்தல் வரும் என்று ஸ்டாலின் கூறினார். எங்கள் எம்.எல்.ஏ.-க்களை யாராலும் வாங்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.