கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!

கரூரில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாகவும் தமிழர்களின் பாரம்பாியத்தை பறைசாற்றும் வகையிலும்  நடைபெற்ற தேங்காய் சுடும் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கரூர் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதம்…

கரூரில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாகவும் தமிழர்களின் பாரம்பாியத்தை பறைசாற்றும் வகையிலும்  நடைபெற்ற தேங்காய் சுடும் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

கரூர் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதம் முதல் நாளை வரவேற்கும் வகையில் தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் கரூர் ஆற்றங்கரையில் தேங்காய்க்குள் கடலை, வெல்லம், அவல், பாசிப்பயறு, ஏலக்காய் என 5 வகையான பூரணங்கள் வைத்து அந்த தேங்காவை தீயில் சுட்டு அதை அப்பகுதியில் உள்ள அம்மன்,விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வங்களுக்கு படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டனர்.

மேலும் நோய் நொடி இன்றி மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், ஆடி மாதத்தில் இருந்து நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கவும், மனித சமுதாயம் சிறப்பாக வாழ வேண்டும் எனவும் அம்மனை வேண்டி இந்த தேங்காய் சுடும் வைபவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனா்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.