ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்களுக்கு மோர் வழங்கிய எம்எல்ஏ!

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோா் வழங்கினார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோா் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு
பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனா்.

இந்நிலையில் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் தம்பிபட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை ஏற்பாட்டில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் , மோர் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.