இறுதிகட்டத்தை எட்டிய மதுரை அதிமுக மாநாட்டிற்கான பணிகள்!

மதுரை வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள அதிமுக பொன்னிவிழா ஆண்டு மாநாட்டின் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு வரும் 20-ந் தேதி நடைபெற…

மதுரை வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள அதிமுக பொன்னிவிழா ஆண்டு மாநாட்டின் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு வரும் 20-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக தொண்டர்கள் அமர்வதற்காக 10,000-க்கும் மேற்பட்ட நாற்காலிகள் வர வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மேடை அமைக்கும் பணிகள், மேற்கூரை, சமையல் கூடாரங்கள், உணவு பரிமாறும் இடங்கள், கழிப்பறைகள், மேற்கூரை அலங்காரம், மின்விசிறி அமைக்கும் பணிகள், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உருவம் பதித்த பிரம்மாண்டமான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது, அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்று சாதனைகள் மற்றும்
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்களை
நினைவூட்டும் விதமாக கண்காட்சி ஏற்பாடுகள் ஆகியவை மும்பரமாக நடைபெற்று
வருகிறது.

தற்போது, மாநாடு நடைபெறும் அன்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் முதற்கட்டமாக 10,000 இருக்கைகள் 7 லாரிகள் மூலம் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு காண பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.