அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

அரூரில் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா நடைபெற்றதில், ஏராளமான பெண்கள் கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனா். தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டை வழிபாடு மன்றத்தின் சார்பில் ஆடிப் பௌணர்மி…

அரூரில் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா நடைபெற்றதில், ஏராளமான பெண்கள் கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனா்.

தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டை வழிபாடு மன்றத்தின் சார்பில்
ஆடிப் பௌணர்மி தினத்தையொட்டி, ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா மிகச்
சிறப்பாக நடைபெற்றது. இதில் பெண்கள் பம்பை வாத்தியங்கள் முழங்க கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மேலும் பம்பை வாத்தியம் முழங்க செவ்வாடை அணிந்த பெண்கள் கஞ்சி ஊர்வலமாக எடுத்து வந்து, 3 சிறுமிகளை நிறுத்தி சக்தி அழைத்து, அம்மனுக்கு கஞ்சி படைத்தனர்.

இதனை தொடர்ந்து பால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகளை செய்தனர். பின்னா் கஞ்சி ஊர்வலத்தின் போது பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்தி, சாமியாடி வந்தனர்.  இதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மேல்பாட்சாபேட்டை ஓம் சக்தி மன்ற நிர்வாகிகள், பக்தர்கள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.