சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? வாரிசு வெற்றி விழாவில் ஆவேசமடைந்த சரத்குமார்

சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? என வாரிசு வெற்றி விழாவில் நடிகர் சரத் குமார் ஆவேசமாக பேசியுள்ளார். வாரிசு படத்தின் வெற்றிக்கு  நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில்…

சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? என வாரிசு வெற்றி விழாவில் நடிகர் சரத் குமார் ஆவேசமாக பேசியுள்ளார்.

வாரிசு படத்தின் வெற்றிக்கு  நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை
சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்
நடிகர் சரத் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் ரஜினிகாந்த் இருக்கும்பொழுதே விஜய்க்கு மீண்டும்  சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கிறீர்களே? என்று செய்தியாளரின் கேள்விக்கு கோவம் அடைந்த சரத்குமார் காட்டமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

என் மகனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார். எனக்கு என் அப்பா தான் சூப்பர் ஸ்டார்.
சூப்பர் ஸ்டார் என்ற விஷயத்தை பெரிதுபடுத்தி உலகத்தில் இதுதான்  மிகப்பெரிய பிரச்சினை போல் செய்ய வேண்டாம்.

நான் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன். முதலமைச்சராவார் பிரதமர் ஆவார் என்று நான் சொல்லவில்லை. சூப்பர் ஸ்டார் என்பது டைட்டில் அவ்வளவுதான்.
நான் சுப்ரீம் ஸ்டார். சுப்ரீம் ஸ்டார் பெருசா சூப்பர் ஸ்டார் பெருசா.பட்டத்தை தான் பாப்பிங்களா மனுசன பார்க்க மாட்டீங்களா” என நடிகர் சரத் குமார் கோபமாக பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.