பாகிஸ்தானில் இன்று காலை 10.55 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 29.585 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.597 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திலும் நேற்று நள்ளிரவு 11.16 மணியளவில் ரிக்டர் 3.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




