சென்னையில் தமிழ்நாட்டின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் 18ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பங்கேற்றனர். சர்வதேச புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும், இலவசமாக பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் தமிழில் உள்ள சிறந்த படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதாகவும் கூறினார்.