முக்கியச் செய்திகள் குற்றம்

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை!

திருவள்ளூர் அருகே பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய தனியார் நிறுவன காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி மோகனா. இவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி தாஸ் என்பவருக்கு உணவு சமைத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், தாஸ் வீட்டின் கதவை பூட்டிவிட்டு கோபமாக வெளியே சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் காரணமாக சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்துள்ளனர். அப்போது, மோகனா அவரது புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற காவலாளி தாஸை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!

அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

Gayathri Venkatesan

இதுதான் தடுப்பூசி பற்றிய வெள்ளை அறிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Vandhana