முக்கியச் செய்திகள் தமிழகம்

+2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர்

பிளஸ் டூ தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதுதான் அனைத்து மாநிலங்களின் கருத்தாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசு சார்பில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நடத்தலாம் என பெரும்பாலான மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் தேர்வு தேவையில்லை என தெரிவித்துள்ளன.

மேலும், தேர்வில் பாடத்தை குறைப்பதுடன், தேர்வு நேரத்தை ஒருமணி நேரமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு முன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பல மாநிலங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “மாணவர்களின் +2 தேர்வு மதிப்பெண்தான் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முதல்படி. ஆகவே +2 மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. இதே கருத்தைதான் பெரும்பாலான மாநிலங்களில் தெரிவிக்கப்பட்டமு. கூட்டத்தில், சி பி எஸ் இ தேர்வு குறித்துதான் அதிகம் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். மத்திய அரசின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

Jeba

திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் கொரோனா நிதி!

பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி!

Saravana