டவ்-தே புயலில் சிக்கி கடலில் மாயமான தமிழக மீனவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களுடன் மேற்குவங்கத்தை சேர்ந்த 6 மீனவர்களும் கேரளா பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மங்களூர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், மீனவர்களை கண்டுபிடிக்க கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கோரிக்கை வைத்தும் பதில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலையிட்டு மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.