தமிழ் முறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணந்த காரைக்குடி இளைஞர்

காரைக்குடி அருகே அமராவதிபுதூர், மணமகனுக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் இனிதாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கராசு – இவர் மாணிக்கவள்ளியின் தம்பதியினர். தங்கராசு…

காரைக்குடி அருகே அமராவதிபுதூர், மணமகனுக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் இனிதாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கராசு – இவர் மாணிக்கவள்ளியின் தம்பதியினர். தங்கராசு பிரான்ஸ் நாட்டில் அம்பாசிடரில் பணிபுரிந்து வருவதால் தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டிலேயே வசித்து வருகிறார். இவரது மகன் கலைராஜன் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் பிறந்த நிலையில் எட்டு வயதில் தனது குடும்பத்தாருடன் பிரான்சுக்கு சென்றுள்ளார். தங்கராசு மகன் அங்குள்ள ரென் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில்  அதே  கல்லூரியில் அறிவியல் பயின்ற மாணவி கயலை காதலித்து வந்தார் . இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்களது காதலை அவர் அவர் பெற்றோர்களிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர். இந்நிலையில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மணமகன் பிறந்த ஊரில் தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்து, இன்று சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மணமக்கள் இருவரையும் மணமகனின் உறவினர்களும், பிரான்சிலிருந்து வந்திருந்த மணமகளின் உறவினர்களும், அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.