உலக கடித தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் 247 அஞ்சலட்டையில் பிரதமருக்கு வண்ண வண்ண எழுத்துக்களால் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் நாள் உலக கடித தினமாக அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள், புரட்சிகளுக்கும் கடிதங்களே காரணமாக இருந்திருக்கின்றன. கடிதம் என்பது ஒரு தனிக்கலையாக காணப்பட்டது. ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் கடிதம் எழுதும் கலையை காணாமல் போய்விட்டது .வாட்ஸ்அப் ஃ,பேஸ்புக் ,டெலிகிராம் போன்ற பல்வேறு வசதிகள் வந்த பின்னும் கடிதம் எழுதும் கலையை நுன் கலையாக மாற்றி வண்ண வண்ண எழுத்துக்களால் தமிழ் மொழியின் சிறப்பினை கடிதங்களாக கையாலேயே படைத்து வருகிறார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த விவசாயி சின்ன பெருமாள்.
இவர் உலக கடித தினத்தை முன்னிட்டு 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் 247 அஞ்சல் அட்டையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்தும் நாட்டின் வளர்ச்சிக்காக அவர் செய்த முன்னெடுப்பு மற்றும் அவருடைய உழைப்பு குறித்தும் அஞ்சல் அட்டையில் வண்ண வண்ண எழுத்துக்களில் மூலம் கடிதத்தை மனைவியின் உதவியுடன் எழுதி வருகிறார் . இந்த விவசாயி தான் வண்ண வண்ண எழுத்துக்களால் தமிழ் மொழி சிறப்பிக்கும் வகையில் கடிதங்களாக படைத்து வருகிறார் .அந்த கடிதத்தில் பொது மக்களின் பிரச்னைகள் குறித்து அந்தந்த துறை சார்ந்த வடிவில் கடிதம் எழுதி அனுப்பி அதற்கான தீர்வையும் பெற்று தந்துள்ளார் .
அன்னையர் தினத்தன்று தமிழ் தாய் சிலை உருவில் வண்ண வண்ண எழுத்துக்களால் கடிதம் எழுதி காரைக்குடியில் இருந்து சுமார் 53 கிலோமீட்டர் நடந்தே சென்று ராமநாதபுரம் அருகே உள்ள வாகைநந்தலில் உள்ள அவரது தாயார் பானுமதிக்கு வழங்கினார் .மேலும் அழிந்து வரும் கடிதங்களை மீட்டெடுக்கும் வகையில்தான் வண்ண வண்ண கடிதங்கள் மூலம் மாணவர்களுக்கு கடிதங்களின் சிறப்புகள் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் விவசாயி சின்னப்பெருமாள்.







