காதலியைக் கரம்பிடித்த ‘குக் வித் கோமாளி’ புகழ்

திண்டிவனத்தையடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சின்னத்திரை புகழ் – பென்ஸியா திருமணம் இந்து முறைப்படி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் ரசிகர் பட்டாளத்தைப்…

திண்டிவனத்தையடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சின்னத்திரை புகழ் – பென்ஸியா திருமணம் இந்து முறைப்படி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற புகழ், தற்போது பிஸியான நகைச்சுவை நடிகராகவும் மாறிவிட்டார். தற்போது ஏ.ஆர். முருகதாஸின் ‘ஆகஸ்ட் 16 1947’, விஜய் சேதுபதியின் 46-வது படம் மற்றும் சந்தானத்தின் ‘ஏஜெண்ட் ‘கண்ணாயிரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

புகழ், கோவையைச் சார்ந்த பென்ஸியா என்ற பெண்னை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்வதற்காக கடற்கரையில்
போட்டோஷுட் நடத்தி விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தனர். கிறிஸ்துவ முறைப்படி பென்சியா வெள்ளை நிற திருமண கவுனில் கண்ணாடியில் தெரிய, புகழ் வெள்ளை சட்டை பேண்ட் அணிந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனையடுத்து, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி புகழ் – பென்சியாவின் திருமணம் நடக்க
உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கூட்ட
நெரிசலைத் தவிர்க்கும் விதமாக சின்னத்திரை நடிகர் புகழ் பென்ஸியாவின் திருமணம்
திண்டிவனத்தை அடுத்த தீவனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோவிலில் இந்து முறைப்படி எளிமையாக நடைபெற்றது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.