தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதிய கன்டெய்னர் லாரி… 3 பேர் காயம்!

தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.  தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட்…

தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த மூன்று கார்கள் மற்றும் ஒரு டாடா சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.   இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.  ஆனால், ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   உடனடியாக தொப்பூர் காவல் துறையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.  இந்த விபத்தால் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.