2024-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 தமிழ் திரைப்படங்கள்!

2024-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.   தற்போதைய சினிமாவில் ஒரு நாளைக்கு எக்கச்சக்கமான படங்கள் திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த மாதம் பொங்கலையொட்டி வெளியான படங்களில்…

2024-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.  

தற்போதைய சினிமாவில் ஒரு நாளைக்கு எக்கச்சக்கமான படங்கள் திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த மாதம் பொங்கலையொட்டி வெளியான படங்களில் அயலான் ஓரளவும்,  கேப்டன் மில்லர் ஓரளவும்,  மிஷன் சாப்டர் 1 படம் நல்ல வரவேற்பையும் பெற்றன. இதே போன்று பிப்ரவரி மாதம் லால் சலாம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தும், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால்,  இந்த மாதம் மலையாள சினிமாவில் வெளியான 3 படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து அசத்தியுள்ளன.  அந்த படங்கள் பிரேமாலு,  பிரம்மயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய மூன்று படங்கள் தான்.
இது ஒருபுறம் இருக்க 2024 ஆரம்பித்து இன்னும் ஒரு திரைப்படம் கூட சொல்லிக் கொள்வது போல் வராதது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில்,  இந்த ஆண்டு தமிழ் சினிமாவை இவர்கள் வந்துதான் காப்பாற்ற வேண்டும் என்பது போல சில படங்கள் நம்பிக்கை கொடுத்துள்ளது.
தக் லைஃப்:
இந்தியன் 2,  கல்கி படங்களில் பிஸியாக இருக்கும் கமல்,  அடுத்து மணிரத்னம் கூட்டணியில் இணைந்திருக்கிறார்.  நாயகன் படத்துக்குப் பின்னர் மீண்டும் இந்த காம்போ இணைந்துள்ளது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்ட்டாக அமைந்துள்ளது .2023 கமல் பிறந்தநாளில் KH 234 டைட்டில் தக் லைஃப் என டீசருடன் அறிவிக்கப்பட்டது.
அப்போது முதலே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது.  கேங்ஸ்டர் மூவியாக தக் லைஃப் படத்தை ரெட் ஜெயன்ட்,  ராஜ்கமல் ஃபிலிம்ஸ்,  மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன.  அதேபோல் கமல்ஹாசனுடன் துல்கர் சல்மான்,  த்ரிஷா,  ஜெயம் ரவி நடிப்பதும் கன்ஃபார்ம் ஆனது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.

வேட்டையன்:

டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் நடிகை ரித்திகா சிங்,  துஷாரா விஜயன்,  அமிதாப் பச்சன் மற்றும் ஃபஹத் பாசில் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி:

அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  மகழ் திருமேனி இயக்கிவரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.  பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது.  இதுவரை விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.  இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

GOAT :

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்திற்கு GOAT என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த்,  மோகன்,  பிரபுதேவா, ஜெயராம்,  கணேஷ்,  யோகி பாபு,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர்.  இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2:

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்,  உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் இந்தியன் 2.  படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால்,  சித்தார்த்,  ரகுல்ப்ரீத் சிங் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
இந்தியன் 2 படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் 24ஆம் தேதி வெளியட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கங்குவா:

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது 3d வேலைகளும் கிராபிக்ஸ் பணிகளும் நடந்து வருகின்றன.  பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை இந்த வருடத்திற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தங்கலான்:

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான்.  மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து,  பசுபதி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.  தங்கலான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து தேர்தல் காரணத்தினால் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.

ராயன்:

நடிகராக திரையுலகிற்கு வந்த தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.  ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.  இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா,  செல்வராகவன்,  பிரகாஷ் ராஜ்,  அபர்ணா பாலமுரளி,  வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.

அமரன்: 

அமரன் படம் சிவகார்த்திகேயன் நடிக்க அந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம்தான் தயாரிக்கிறது .ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கில்தான் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.  படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதியில் மாற்றம் வருவதாக சொல்லப்படுகிறது.

STR 48:

கடைசியாக ‘பத்து தல’ படத்தில் நடித்த சிம்பு,  இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘STR 48’ படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் சிம்பு தனது நடிப்பில் உருவாக இருக்கும் ‘STR 48’ படத்தின் கதாபாத்திரத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராகி வருகிறார். ரூ.100 கோடி செலவில் பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.