கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாள் | நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் நல்லகண்ணுவை நேரில் சந்துத்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த சந்திப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“விடுதலைப் போராட்டத் தியாகியும் – முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம்.

https://twitter.com/Udhaystalin/status/1739558264734704113

தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணங்கள் – முதற்கட்ட இழப்பீடுகளை வழங்கி வந்துள்ள நிலையில், அங்குள்ள கள நிலவரங்களை நல்லகண்ணு அக்கறையுடன் கேட்டறிந்தார்கள். அங்கு, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க கழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விளக்கிக் கூறினோம்.

போராட்டக் குணம், எளிமை, ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி என இளையத் தலைமுறைக்கு வழிகாட்டும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான நல்லகண்ணு நூற்றாண்டையும் கடந்து மேலும் பல்லாண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும்.”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.