இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.







