இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ் நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்காக தேர்தல் தேதியை அறிவித்தார். அதன் தமிழ் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் நாடு முழுவதும் தேர்தல் விதி அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் படம் அகற்றப்பட்டது. அதே போல மாவட்டம் தோறும் அரசு அலுவலகங்களில் உள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், கொடிகள் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றை மறைக்கும் நடவடிகையும் தொடங்கியுள்ளது.
அது மட்டுமின்றி பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை மற்றும் துணை ராணுவப்படையினர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.







