திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சர்ப்பகாவடி எடுத்து வந்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கமாக…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சர்ப்பகாவடி எடுத்து வந்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

அவ்வாறு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுள் சிலர், கண்ணாடி பேழைக்குள் பாம்பினை அடைத்து சர்ப்பக்காவடி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சர்ப்பக்காவடி எடுத்து வருவது தண்டனைக்குரிய குற்றமாக வனத்துறை அறிவித்துள்ளது. சர்ப்பக்காவடி எடுப்பதற்கு தடையும் விதித்துள்ளது.

மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தடையை மீறி சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.