கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்ற பயணி சக பெண் பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்தார். இதுதொடர்பாக ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களிடம் அந்த பெண் புகார் தெரிவித்தார். பின்பு இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் சங்கர் மிஸ்ரா மீது காவல் நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. பின்பு சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் கைது செய்து செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சம்பவம் நடைபெற்ற 6 வாரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சங்கர் மிஸ்ரா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சங்கர் மிஸ்ராவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி காவல் துறை சார்பில், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை நீதிபதி ஹர்ஜ்யோத் சிங் பல்லா விசாரித்தார். அப்போது, “விமானத்தில் பெண் பயணி மீது தான் சிறுநீர் கழிக்கவில்லை என்றும், அவர் வயதானவர் என்பதால் தனக்குத் தானே சிறுநீர் கழித்துக் கொண்டார் என்றும் நீதிபதியிடம் சங்கர் மிஸ்ரா தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, டெல்லி காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்து சங்கர் மிஸ்ராவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.