மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தேவாலயத்தில்
உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிரியன்
ஆர்த்தோ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் இரவு நுழைந்த மர்ம நபர் ஒருவர் தேவாலயத்தின் வெளியே வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றார்.
இது குறித்து தேவாலய நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் தேவாலயத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் தேவாலயத்தின் சுற்று சுவரை எகிறி குதித்து உண்டியலை உடைத்து பணத்தை திருடியது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 60 வயதான விஜய குமார் என்ற முதியவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







