அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்கக் கோரி சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் திமுக தேர்தல் அறிக்கையின் படி அனைத்து மகளிர்க்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்காததை கண்டித்தும், பால், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு உள்ளிட்டவைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திமுக
அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.







