6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச்…

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் என்பவரின் 6 வயது மகன் கடத்தூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த 16-ம் தேதி மாலை வீட்டுக்கு அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதை அடுத்து, சிறுவனின் பெற்றோரும், உறவினரும் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து, தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார், நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவனின் உடல் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது சிறுவன் கழுத்துப் பகுதியில் காயங்களுடன் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் தொட்டியில் சடலம் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தருமபுரி தீயணைப்பு துறையினரை வரவழைத்த கிருஷ்ணாபுரம் போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

இது தொடர்பாக சிறுவனின் உறவினரான 18 வயது இளைஞரான பிரகாஷ் எனப்வரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதத்தில் சிறுவனை கொலை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாகக் கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.