தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

தமிழ்நாட்டு கடலோர எல்லைப் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும்,  கடத்தல் சம்பவங்களை தடுக்கவும்…

தமிழ்நாட்டு கடலோர எல்லைப் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும்,  கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகே  இந்திய எல்லைக்குள் இலங்கை படகு ஒன்று அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது. 

இதையும் படியுங்கள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து – சுரங்கத்தை கிடைமட்டமாக துளையிடும் பணி தீவிரம்..!

இதையடுத்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றி வளைத்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். 

அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா? அல்லது கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.