பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த நபரின் தாயாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான நிதியை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து அரவிந்தராஜின் தாயாரை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, அரசு சார்பில் 3 லட்ச ரூபாய்க்கான காசோலையும், மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து 2 லட்ச ரூபாய்க்கான ரொக்கப்பணத்தையும் வழங்கினார்.
தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக மூத்த மகன் நரேந்திரனுக்கு அரசு வேலை வழங்குமாறு அரவிந்தராஜின் தாயார் கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் மற்றும் பாலமேடு ஜல்லிகட்டு கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.