ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜோஷிமத் சம்பவத்தை போன்று நிகழாமல் தடுக்கும் வகையில், நவீன எச்சரிக்கை மையங்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதைபோல்…

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜோஷிமத் சம்பவத்தை போன்று நிகழாமல் தடுக்கும் வகையில், நவீன எச்சரிக்கை மையங்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதைபோல் இமாச்சல பிரதேச மாநிலத்திலும், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இமாச்சலில் உள்ள நாகனி உள்ளிட்ட 3 கிராமங்களில் உள்ள 32க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு, அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதையடுத்து, பேசிய முதலமைச்சர் சுக்கு, ஜோஷிமத் போன்று இமாச்சல பிரதேசத்தில் சம்பவம் நிகழ வாய்ப்பே இல்லை என்றும், எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக இமாச்சலில் நவீன எச்சரிக்கை மையம் அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.