மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கைது

மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மைசூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி…

மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மைசூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் மாணவருடன் இரு நாட்களுக்கு முன், சாமுண்டி மலை அடிவாரத்துக்குச் சென்றார். இருவரும் காதலர்கள் எனக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், மாணவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. பின்னர் தப்பிச் சென்றது.

மாணவியை மீட்ட மாணவர், மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காகச் சேர்த்தார். இதுகுறித்து ஆலனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

இந்தக் கூட்டுக் பாலியல் வன்கொடுமை விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் கூறும்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரும் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொரு குற்றவாளியை தேடி வருகிறோம். ஐந்து பேரில் ஒருவர் சிறுவர் என தெரிய வருகிறது. மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.