முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை

மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மைசூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், 20 வயது உத்தரபிரதேச மாணவி, தன்னு டன் படிக்கும் மாணவருடன் இரு நாட்களுக்கு முன், சாமுண்டி மலை அடிவாரத்துக்குச் சென்றார். இருவரும் காதலர்கள் எனக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், மாணவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

பின்னர், மாணவியை அவர் காதலன் மீட்டு மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். இதுகுறித்து ஆலனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். இந்தக் கூட்டுக் பாலியல் வன்கொடுமை விவகாரம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக ஞானேந்திரா

இதுபற்றி கருத்து தெரிவித்த கர்நாடக அமைச்சர் அரக ஞானேந்திரா, மாலை நேரத்தில் சக
மாணவருடன் அந்த மாணவி ஏன் அங்கு செல்ல வேண்டும்? 7-7.30 மணிக்கு மேல் அங்கு
அவருக்கு என்ன வேலை? கண்ட நேரத்தில் கண்ட இடத்துக்கு சென்றால் நாங்கள் என்ன
செய்ய முடியும்? என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி, அவர் பதவி விலக வேண்டும் என்று கூறியது.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர் அரக ஞானேந்திராவின்
கருத்துகளை ஏற்க முடியாது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அவருக்கு உத்தரவிட்டுள் ளேன் என்று தெரிவித்தார்.

இதற்குப் பிறகு பேசிய அமைச்சர் அரக ஞானேந்திரா, ’நான் கூறிய கருத்துக்களுக்காக
மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவி என் மகள் போன்றவர். இந்த
சம்பவம் நம் மாநிலத்துக்கு கரும்புள்ளியாக அமைந்துள்ளது’ என்றார்.

Advertisement:
SHARE

Related posts

தனி விமானத்தில் ஐதராபாத்.. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா !

Halley karthi

80 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பெரியகோவில்

Vandhana

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவரம்!

Gayathri Venkatesan