இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக யுஜி நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
ஆனால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே நீட் வினாத்தாள் பல்வேறு இடங்களில் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மறு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடுமுழுவதும் 8-ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் யுஜி நீட் மறுத்தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை (NTA), NEET (UG) 2026 மறுதேர்வை ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூன் 2026 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை (NTA), NEET (UG) 2026 மறுதேர்வை ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூன் 2026 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




