மதுரையில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு! – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் வணிகர் சங்கங்களின்…

மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 41வது வணிகர் தின மற்றும் வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் மூர்த்தி மற்றும் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ,கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வணிகர் சங்க மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா சிறப்புரையாற்றினர். இதையடுத்து, இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு பிரகடனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படியுங்கள் : “ஏழைகளை மையப்படுத்தி பாஜக வின் ஆட்சி உள்ளது” – டெல்லியில் அண்ணாமலை பேச்சு!

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு பிரகடனத் தீர்மானங்கள் : 

  1.   இரட்டை விலை கொள்கை ஆன்லைன் வர்த்தகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை அகற்றிட  வேண்டும்.
  2.  ஒரே நாடு ஒரே வரி முழக்கம் தணிக்கை செய்யப்பட்ட வரிவிதிப்புக்கு அபராதம் தவிர்த்திட வேண்டும்.
  3. இயற்கை பேரிடர் ஏற்படும்போது வணிக பாதிப்புக்கு அரசு காப்பீடு திட்டம் வழங்கிட வேண்டும்.
  4.  ஜி.எஸ்.டி உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
  5.  சுங்கசாவடிகள் அகற்றப்பட வேண்டும்.
  6. டெல்டா மாவட்டங்களோடு தென் மாவட்டங்களை இணைத்து பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கிட வேண்டும்.

உள்ளிட்ட  தீர்மானங்கள் தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.