முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம் செய்திகள்

2 மாதத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் 40 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா 2 வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இந்தத் தொற்று பெரும் சவாலாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே கொரோனா 2 வது அலை, குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளும் இந்த தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில், சுமார் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு, அதாவது 9 வயதுக்கு குறைவானர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி கர்நாடக மாநில கொரோனா வார்ரூம் அறிக்கைபடி, 9 வயதுக்கு குறைவான 39 ஆயிரத்து 846 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 வயதில் இருந்து 19 வயதுக்கு உட்பட்டோர், ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 44 பேருக்கு, மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து மே 18 ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த வருட மார்ச் 18 ஆம் தேதி வரை கொரோனாவால் 28 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், மே 18 ஆம் தேதி வரை மேலும் 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ‘குழந்தைகளுக்கு எளிதாகத் தொற்று பரவுகிறது. அவர்கள் வீட்டில் உள்ளவர்களுடன் நெருங்கி பழகுவதால், தொற்றையும் வேகமாக பரப்பி விடுகிறார்கள். குழந்தைகளுக்கு லேசான அறிகுறி தென்பட்டாலே, அவர்களை தனிமைப்படுத்திவிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Advertisement:

Related posts

மறைந்த முன்னாள் MLA யசோதா உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

Niruban Chakkaaravarthi

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- 12 பேர் பலி!

Karthick

’இது கஷ்டமான காலம்தான், அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல’: தமிழக முதல்வர்

Karthick