மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரின் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுவர் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவு எடுக்கும்படி குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு அரசு எழுதிய கடிதம் பாராட்டுக்குரியது என்றும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவர் விடுதலையை வலியுறுத்தி அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எழுவர் விடுதலை தொடர்பாக கடந்த அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதையும் திருமாவளவன் எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதம் என்று கூறியுள்ள திருமாவளவன், அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 161ல் தண்டனை குறைப்பு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.