தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 28 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 73…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 28 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப் பட்டது. இதில் 28 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்த 32 ஆயிரத்து 982 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 17 லட்சத்து 39 ஆயிரத்து 280 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், இதுவரை இல்லாத அளவாக 493 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 23 ஆயிரத்து 754 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 3 லட்சத்து ஐந்தாயிரத்து 546 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரே நாளில் 2689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 1194 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 664 பேருக்கும் திருவள்ளூரில் 887 பேருக்கும் திருச்சியில் 1128 பேருக்கும் கோவையில் 3537 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.