போலி ஐடி கொடுத்து தடுப்பூசி செலுத்தினாரா? சர்ச்சைக்கு பிரபல நடிகை விளக்கம்!

கொரோனா தடுப்பூசியால் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீரா சோப்ரா, அதற்கான விளக்கத்தை வெளியிட்டு ள்ளார். தமிழில் ‘அன்பே ஆருயிரே’, ‘ஜாம்பவான்’, ‘லீ’, ‘மருதமலை’ உள்பட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் மீரா…

கொரோனா தடுப்பூசியால் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீரா சோப்ரா, அதற்கான விளக்கத்தை வெளியிட்டு ள்ளார்.

தமிழில் ‘அன்பே ஆருயிரே’, ‘ஜாம்பவான்’, ‘லீ’, ‘மருதமலை’ உள்பட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் மீரா சோப்ரா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் மீரா சோப்ரா, பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர். இவர், சில நாட்களுக்கு முன்பு, தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர், சமூக வலைதளத்தில் அதற்கான புகைப்படத்தை வெளியிட்டார். இது சர்ச்சையானது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சி பகுதியில் தடுப்பூசிகளின் பற்றாகுறை காரணமாக முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே போடப்படுகிறது. கடந்த மாதம் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பலர் தடுப்பூசிக்காக காத்திருக்கும் நிலையில், கொரோனா மருத்துவமனையில் முன்களப் பணியாளராக பணியாற்றியதாக போலி அடையாள அட்டைக் கொடுத்து, நடிகை மீரா சோப்ரா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து பலரும் மீரா சோப்ராவைக் கடுமையாக விமர்சித்தார்கள். இந்நிலையில், நடிகை மீரா சோப்ரா தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எல்லாருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிந்தளவு முயற்சி செய்து வருகிறோம். அதே போல நானும் தெரிந்தவர்களிடம் உதவி கேட்டேன். ஒரு மாத முயற்சிக்குப் பிறகு ஒரு தடுப்பூசி மையத்தில் பதிவு செய்ய முடிந்தது. அதற்காக என் ஆதார் அட்டையை கேட்டார்கள். அனுப்பி வைத்தேன். தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அடையாள அட்டை என்னுடையது அல்ல. அதில் என் கையெழுத்தும் இல்லை. இதுபோன்ற செயல்களை கண்டிக்கிறேன். இப்படி ஒரு போலியான அடையாள அட்டை என் பெயரில் உருவாக்கப்படுவது ஏன், எதற்கு என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இவ்வாறு மீரா சோப்ரா கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.