சட்டமன்ற தேர்தல் 2026 ; பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

சட்ட மன்ற தேர்தலையொட்டி பாமகவின் (அன்புமணி தரப்பு) முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை அறிவித்தார். அதன் படி, சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார் கோயில் (தனி), கீழ்வேலூர் (தனி), பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாமக தரப்பில் முதற்கட்டமாக 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேட்பாளர்கள் விவரம்:

1. கீழ்வேளூர் – திரு.ச. வடிவேல் இராவணன், அவர்கள் பொதுச் செயலாளர், பாமக.

2. அம்பத்தூர் – திரு. கே.என். சேகர் அவர்கள் முன்னாள் நகர்மன்றத் தலைவர், மாநிலத் துணைத் தலைவர், பாமக.

3. செஞ்சி – முனைவர் அ.கணேஷ் குமார், பி.எச்டி., அவர்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், இளைஞரணித் தலைவர், பாமக

மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.