திரும்பப் பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகள்… இது எதிர்பார்த்தது தான்…!! – ப.சிதம்பரம் ட்வீட்

எதிர்பார்த்தது போலவே 2000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் சரியான பரிவர்த்தனை நடைபெறாமல்…

எதிர்பார்த்தது போலவே 2000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் சரியான பரிவர்த்தனை நடைபெறாமல் இருந்ததால், தற்போது மே 23-ஆம் தேதி முதல் இவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் எனவும், அதற்கு பிறகு செல்லுபடி ஆகாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 20,000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் பா.சிதம்பரம், ”எதிர்பார்த்தது போலவே, ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற மத்திய அரசு/ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2016 நவம்பரில் நாங்கள் இதைச் சொன்னோம், அது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/PChidambaram_IN/status/1659568932553121792?t=MT4-kLsVHSm7M9shC5KoHA&s=08

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, மத்திய அரசு/ ரிசர்வ் வங்கி ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியமில்லை. 2000 ரூபாய் நோட்டு ஒருபோதும் ‘சுத்தமான’ நோட்டாக இருந்ததில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் தங்களது கறுப்புப் பணத்தை தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது!” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.