2000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்த பொது மக்களின் கருத்துக்களை பார்க்கலாம்…
கடந்த இரண்டு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் சரியான பரிவர்த்தனை நடைபெறாமல் இருந்ததால், தற்போது மே 23-ஆம் தேதி முதல் இவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் எனவும், அதற்கு பிறகு செல்லுபடி ஆகாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 20,000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு :
”பணக்காரர்கள்தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும். ரிசர்வ் வாங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள்தான் கவலைப்பட வேண்டும். நடுத்தர மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு இல்லை. எனவே நடுத்தர மக்கள் பணத்தை மாற்றி கொள்ள அவசியம் இல்லை. பணம் வைத்திருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்கள்.
நாங்கள் எல்லாம் 2000 ரூபாய் நோட்டுகளை பார்த்து ஒரு வருடம் ஆகிறது. வங்கியில் கூட பார்க்க முடியவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பணக்காரர்கள்தான் பயன் பெறுவார்கள். அரசியல்வாதிகளிடம் கோடி கோடியாக பணம் இருக்கிறது. இதற்கு அவர்கள் தான் வருத்தப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பல்வேறு பகுதிகளில் முடங்கி இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளிவரும். பதுக்கி வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் நோக்கம்” என்று தெரிவித்தனர்.




