திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188வது குருபூஜை விழா!

திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு…

திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் மடம் உள்ளது. 188-வது ஆண்டு குருபூஜை வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது.

அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.