நிபா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், இருவர் உயிரிழந்தனர்.
நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வௌவால்கள், பன்றிகள் அல்லது மனிதர்களின் உடல் திரவங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் பரவும் இந்த வைரஸ் மூளையைச் சேதப்படுத்துகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு முதலில கேரளாவில் கண்டறியப்பட்டது.
இதனிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கேரள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் சிகிச்சைக்காக மேலும் 20 டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று அறிவித்தது.
இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கப்படும் மருந்து, நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்பட வேண்டும்.” அவரைப் பொறுத்தவரை, இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த மருந்து செலுத்தப்படவில்லை.
நிபாவால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 2-3 சதவீதமாக இருக்கிறது. கோவிட் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது (40 முதல் 70 சதவீதம் வரை) மிக குறைவாக உள்ளது.. வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வாரம் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிபாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூடி மருத்துவக் குழுவை அமைத்து அறிக்கையை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.







