முக்கியச் செய்திகள் மழை

ஒரே நாளில் 18 செ.மீ மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் இரவு நேரத்தில் மழை விட்டுவிட்டு பெய்தது. நள்ளிரவில் மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழையாக பெய்தது. இந்த மழை, இன்று காலை வரை நீடித்தது.

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை பெய்தாலும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கடலூர் நகரப்பகுதிகளில் 173 புள்ளி 2 மில்லி மீட்டரும், ஆட்சியர் அலுவலகத்தில் 170 புள்ளி 2 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக லக்கூரில் 9 புள்ளி 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை தீயணைப்புத்துறையினர் படகு மூலம் மீட்டு அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் தங்க வைத்துள்ளனர். இதனையடுத்து, வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Advertisement:
SHARE

Related posts

ஸ்ரீவைகுண்டம் அருகே VAO தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Jeba Arul Robinson

புதிய வகை கொரோனா 70 நாடுகளுக்கு பரவி உள்ளது: உலக சுகாதார அமைப்பு

Niruban Chakkaaravarthi

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

Jeba Arul Robinson