முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தொடரும் மழை: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி வழிகின்றன. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நாளை மறுநாள் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும், அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் இருக்கிறது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆர்டிஓ அலுவலகத்தில் இனி தேர்வு இல்லை!

G SaravanaKumar

சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் சசிகலா

Halley Karthik

செங்கல்பட்டு பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

Web Editor