தமிழ் நாடு சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு…!

தமிழ் நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜேசிடி பிராபாகரும், துணை சபாநாயகராக எம்.ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா, அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றார். தொடர்ந்து செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். அதே போல உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர்.

இதனை தொடர்ந்து நாளை தமிழ் நாடு சட்ட மன்றத்திற்கான சபாநாயகர் மற்றும் துணை சாபநாயகர் ஆகியோருக்குகான தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக தவெக சார்பில் சபாநாயகராக ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகராக எம்.ரவிசங்கரும் போட்டியிடுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் சட்டமன்ற முதன்மைச் செயலாளர் சீனிவாசனிடம் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இப்பவிகளுக்கு வேறு யாரும் மனுத்காக்கல் செய்யவில்லை. இதனை தொடர்ந்து தமிழ் நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகராக எம்.ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.