சபாபதி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து தனது கல்லூரி நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் சந்தானம்.
ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான சபாபதி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சபாபதி திரைப்படத்தை தனது கல்லூரி நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என 150-க்கு மேற்பட்டோருக்கு மீனம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில், சிறப்பு காட்சிக்கு நடிகர் சந்தானம் ஏற்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து, திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு களித்த, அவரது நண்பர்கள், இன்று திரையுலகில் மிகப்பெரிய நடிகராக சந்தனம் வளர்ந்திருந்தாலும், கல்லூரி கால நண்பர்களை அவர் எப்போதும் மறந்ததில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், நடிகர் சந்தானம் நடித்த ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும், இதுபோன்று குடும்பத்தினருடன் சென்று படம் பார்க்க ஏற்பாடு செய்வார் என மகிழ்ச்சியுடன் அவரது நண்பர்கள் கூறினர்.








