குற்றம் தமிழகம் செய்திகள் வேண்டாம் போதை

ஆந்திராவில் இருந்து 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து சென்னை வழியாக 425.8
கிலோ கஞ்சா திருச்சிக்கு கடத்தப்படுவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்
பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, 2018ம் ஆண்டு மே 5ம் தேதி சென்னை கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த விருதுநகர் மாவட்ட பதிவெண் கொண்ட லாரியை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, 425 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துராசா, அப்துல் ரஜாக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிதியமைச்சர் வாகனத்தின் மீது செருப்பு வீச்சு விவகாரம்: முன் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Web Editor

கோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்

G SaravanaKumar

உறவினரை 10 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது – ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

EZHILARASAN D